லங்கா சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (24) முதல் குறைத்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 120 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பூண்டு மற்றும் அரிசி மாவின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
கொண்டைக்கடலை ஒரு கிலோகிராம் 15 ரூபாவினாலும், சம்பா நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 11 ரூபாவினாலும், 425 கிராம் டின்மீனின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தவிர, ஒரு கிலோகிராம் பெரிய பச்சைப்பயறு மற்றும் ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி விலையும் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.