deepamnews
இலங்கை

அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அரச பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் உட்பட ஏழு அரச நிறுவனங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, விற்கப்படும் அரசு வணிகங்கள் பின்வருமாறு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம்
ஸ்ரீலங்கா டெலிகொம்
C/S இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
Canville Holdings (Pvt) Co. (பிராண்டு Hyatt)
கொழும்பு ஹில்டன் ஹோட்டல்
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம்
சிலோன் மருத்துவமனை

ஆகிய ஏழு அரச பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

வேகமாக பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் – பொதுமக்களிடம் கோரிக்கை

videodeepam

பல்லாயிரம் பக்தர்கள் வடம்பிடிக்க இடம் பெற்ற  வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவம்!

videodeepam

இலங்கை படையினரின் ஆயுதங்கள் எமக்கு அச்சத்தை அளிக்கிறது – கச்சதீவு திருவிழாவில் கலந்துகொண்ட இந்தியர்கள் தெரிவிப்பு

videodeepam