deepamnews
இந்தியா

இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது, மோடி எனும் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  நேற்று முன்தினம் (23) முதல் அமுலாகும வகையில், அவரது மக்களவை உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதிக்கு சிறப்புத் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இந்திய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  சதி முயற்சிகளுக்கு எதிராக ராகுல் காந்தி செயற்படுவார் எனவும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Related posts

கர்நாடக முச்சக்கரவண்டியில் மர்மப் பொருள் வெடிப்பு

videodeepam

மேலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின்போது ஜல்லிக்கட்டுக் காளை திமிறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

videodeepam

சமூகப் பொருளாதாரப் புரட்சிக்கு  பிரதமர் நரேந்திர மோடியே காரணம் – வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு.

videodeepam