deepamnews
இலங்கை

இலங்கையை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம்  கட்டியெழுப்ப முடியாது – இரா.சாணக்கியன் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபீட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் என கூறிக்கொண்டு மறுபக்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதாவது, மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை  சர்வதேச நாணய நிதியின் ஊடாக வரும் கடனை வைத்து மாத்திரம் தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று சொன்னால் அது ஒரு முட்டாள் தனமான சிந்தனை.

நாங்கள் சொன்ன விடயம் முதலீடுகளை கொண்டு வருவதற்காக எங்களுடன் சேர்ந்து செயல்படுங்கள். தமிழருக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்குவதினூடாக எங்களுடைய அதிகாரப்பகிர்வை சரியான வகையிலே நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாங்கள் பாரிய முதலீடுகளை நாங்கள் இந்த நாட்டுக்குள் கொண்டு வருவோம்.

இந்த முதலீட்டை கொண்டுவந்து இலங்கையின் பணவீக்கத்தை குறைக்க கூடியதாக இருக்கும் இவை எவற்றினையும் செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பான் கீ மூன், மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை நினைவுபடுத்த வேண்டும் – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam

மருத்துவ பானமான ஜீவனி’க்கும் தட்டுப்பாடு

videodeepam

அராலி பாலத்தடியில் விபத்து – இளம் குடும்பஸ்தர் படுகாயம்!

videodeepam