deepamnews
இலங்கை

இன்றுமுதல் பால் மாவின் விலை குறைப்பு – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானம்

இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 200 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 1,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 1,160 ஆகவும், 1 கிலோ பாக்கெட்டின் விலை 3,100 ரூபாயில் இருந்து 2,900 ரூபாயாகவும் குறைகிறது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

சிவாஜியின் நூல் வெளியீட்டில் இந்திய துணைத் தூதுவருக்கு ஆசனம் வழங்காத ஏற்பாட்டாளர்கள்.

videodeepam

22வது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று

videodeepam

2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

videodeepam