deepamnews
இலங்கை

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பயனளிக்காமல் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், உயர்த்தப்பட்ட பெரும்பாலான பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.

ஆனால் பல கடை உரிமையாளர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரசபைக்கு புகார்கள் வந்துள்ளன.

எனவே, நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் கட்டணத்தில் மாற்றம் –  பந்துல குணவர்தன தெரிவிப்பு

videodeepam

அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் உரிய திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு தயாரிக்கப்படும்  – ஜனாதிபதி 

videodeepam

நாட்டில் மழை மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

videodeepam