deepamnews
இலங்கை

பொதுமக்களை வதைக்கும் அரசாங்கம் – சுரேஸ் குற்றச்சாட்டு

அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் பொதுமக்களை வதைக்கும் செயலை செய்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் யாழ்ப்பாணம் மட்டுமன்றி   முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட  பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுவதாக யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன்   தெரிவித்தார்.

அத்துடன், புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் கொண்டு தென்னிலங்கையில் சிங்களவர்களையும் அடக்குவதற்கு அரசாங்கம் முயல்வதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த தடைச் சட்டத்தின் ஊடாக பேச்சுச் சுதந்திரம் மாத்திரமன்றி போராடுவதற்கான சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

இன்று முதல் முறையாக கூடுகிறது தேசிய சபை

videodeepam

13 வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிங்கள மக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

videodeepam

மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு.

videodeepam