deepamnews
இலங்கை

கண்களை மூடிக்கொண்டு ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் ஆதரிக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கண்களை மூடிக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் ஆதரிக்கும் நிலையில் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும், அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறும் ஜனாதிபதியிடம் முதல் கோரிக்கை முன்வைத்தாகவும், அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்த பின்னர் நாட்டின்  சாதகமான விடயங்களுக்கு மட்டும் ஆதரவு வழங்கப்படும் எனவும் சாகர காரியவசம்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விடுதலையை வலியுறுத்தி கர்நாடகாவில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கையர்கள்

videodeepam

இலங்கை ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே நிலையான வளர்ச்சியை அடைய முடியும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

videodeepam

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடை

videodeepam