deepamnews
இந்தியா

மோடியின் அவரது வசீகரத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர் – தேசியவாத கட்சியின் தலைவர் தெரிவிப்பு  

பிரதமர் மோடியின் கல்வி தகுதிக்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவரது வசீகரத்துக்காகவே தான் வாக்களித்தார்கள் என்றும் தேசியவாத கட்சியின் தலைவர் அஜித் பவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் தற்போது கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பதில் அளித்த அஜித் பவார்,

 “கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மக்கள் மோடியின் கல்வித் தகுதியைப் பார்த்தா வாக்களித்தனர்? அந்தத் தேர்தலில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவுக்கு அதுவரை இல்லாத ஒரு வசீகரத்தை பார்த்து வாக்களித்தனர்,.

 நமது ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தான் முக்கியம். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பெரும்பான்மை பெரும் கட்சி தலைமையேற்கிறது. அரசியலில் கல்வி ஒரு பெரிய விஷயம் இல்லை.

 மோடியின் கல்வி பிரச்சனையை விட்டுவிட்டு பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரதானமான பிரச்சினைகள், சமையல் எரிவாயு, அத்தியவாசிய பொருள்களின் விலை பிரச்சனையை நாம் விவாதிக்க  வேண்டும்’ என்று அஜித் பவார் கூறினார்.

Related posts

இந்திய திரையுலக பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது

videodeepam

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையில் இடம்பெறும் சாத்தியம்

videodeepam

இந்திய பொருளாதாரம்  அடுத்த ஆண்டு கடினமாக இருக்கும் –   ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவிப்பு

videodeepam