deepamnews
இலங்கை

இன்று முதல் பாணின் விலை 10 ரூபாவால் வீழ்ச்சி

இன்று முதல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், இன்று முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக, கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என ஊடகங்களில், வெளியாக செய்திகளை அடுத்து, கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் அதிரடியாக பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.  

Related posts

மின் பட்டியல்தொடர்பில் எதிர்வரும் ஜனவரி முதல் வடக்கில் நடைமுறையாகும் புதிய திட்டம்.

videodeepam

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம்

videodeepam

அமைச்சர் டக்ளஸ் மீது வர்ணகுலசிங்கம் காட்டம்

videodeepam