deepamnews
சர்வதேசம்

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவொன்றுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் மூன்று ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சூடானின் பல பகுதிகளில் வன்முறைச் செயல்கள் பதிவாகியுள்ளன.

2021 அக்டோபரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது.

இராணுவத் தலைவர் ஜெனரல் ஃபத்தர் அல்-புஹாரானுக்கு விசுவாசமான படைகளுக்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே மோதல் தொடங்கியது.

சூடான் இராணுவம் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவித்துள்ளதுடன், மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருவதாக சமீபத்திய வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உலக சாதனை படைத்த வெங்காயம்.

videodeepam

ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையில் கடும் மோதல் – 41 பெண்கள் பலி..!

videodeepam

பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை!

videodeepam