deepamnews
இந்தியா

பருவநிலை மாற்றம் பல்வேறு கோணங்களில் நம்மை தாக்குகிறது : நிர்மலா சீதாராமன்

காலநிலை மாற்றம் இப்போது வெவ்வேறு கோணங்களில் அன்றாட வாழ்க்கையில் நம்மைத் தாக்குகிறது  என்று இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உலக வங்கி ஏற்பாடு செயத நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை முயற்சியானது, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்களை சமாளிக்க இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிலையான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்முயற்சியானது காலநிலையைச் சுற்றியுள்ள சமூக விதிமுறைகளை பாதிக்க சமூக வலைப்பின்னல்களின் வலிமையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் கொண்ட ‘ப்ரோ-பிளானட் பீப்பிள்’ என்ற உலகளாவிய வலையமைப்பை உருவாக்கி வளர்க்க திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Related posts

தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சை கருத்து –  6 மொழிகளில் பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன்

videodeepam

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை சிறுமைப்படுத்த வேண்டாம் – சீமான் கோரிக்கை

videodeepam

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து 6 தமிழர்கள் விடுதலை –  சீமான் மற்றும் ராமதாஸ் வரவேற்பு

videodeepam