10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (20) உலகின் பல நாடுகளில் மிகவும் அரிதான கலப்பின சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. எனினும் கலப்பு கிரகணத்தை காணும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கவில்லை.
இந்த கலப்பு சூரிய கிரகணத்தை உள்ளூர் நேரப்படி இன்று (20) காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 மணி வரை தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த கலப்பின கிரகணங்கள் ஒரு வகை சூரிய கிரகணமாக தொடங்கி மற்றொரு வகை கிரகணமாக மாறுகிறது.
சூரிய கிரகணங்கள் முழு சூரிய கிரகணத்திலிருந்து வளையமாக மாறும் என்று நாசா சுட்டிக்காட்டுகிறது.
இந்த வகையான கிரகணங்களின் போது – சந்திரன் சூரியனுக்கு நேர் எதிரே செல்லும் போது – சந்திரன் சூரியனை விட சற்றே சிறியதாக தோன்றும். இதன் விளைவாக, சூரியனின் சுற்றளவை சந்திரனைச் சுற்றி வளைய வடிவில் காணலாம்.