நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு முன்பாகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக அக்கறை கொண்டுள்ளார் என டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.