deepamnews
இலங்கை

மேலும் 02 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் இறக்குமதி

கடந்த 19ஆம் திகதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகளின் மாதிரிகள் இன்று (22) எடுக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு.ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள பேக்கரி தொழிற்சாலைகளுக்கு மட்டும் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை இந்தியாவிலிருந்து 5 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 02 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

Related posts

இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்.

videodeepam

21 வயது இளம்பெண் கொலை..! 29 வயது இளைஞன் கைது

videodeepam

தேர்தலுக்கான நிதியை கோரி உயர்நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழு

videodeepam