தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், மார்ச் மாதத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு அல்லது பணவீக்கம் கணிசமாகக் குறைவடைந்துள்ளது.
பெப்ரவரியில் 53.06 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், மார்ச் மாதத்தில் 49.2 வீதமாக குறைவடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, மார்ச் மாதத்தின் உணவுப் பணவீக்கம் 42.3 மூன்று வீதமாகக் குறைவடைந்துள்ளது.
இருப்பினும், உணவு அல்லாத பணவீக்கம் தொடர்ந்தும் 54.9 வீதமாகக் காணப்படுகின்றது.