deepamnews
இலங்கை

வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

வெளியில் நடமாடும் ஆடுகள், மாடுகள் போன்ற விலங்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர்கள் ஊடாக கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாக, விலங்குகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்பதுடன், முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து,
விலங்குகளுக்கு நோய்கள் ஏற்படுவது மாத்திரமன்றி அவை உயிரிழக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்

Related posts

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே போக்குவரத்து சேவை

videodeepam

நீக்கப்படும் எரிபொருள் ஒதுக்க முறைமை – விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

videodeepam

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

videodeepam