பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்த ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன், சுதந்திரமான விசாரணையின் மூலம், ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மற்றும் பங்குதாரர்கள் தரம் பாராமல் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட எவரையும் தப்பிக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.