deepamnews
இலங்கை

தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த தகுதியும் இல்லை – வீ.ஆனந்த சங்கரி தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நினைத்திருந்தால் மூன்றரை இலட்சம் மக்களை காப்பற்றியிருக்க முடியும் என்றும் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தமமை அழைத்த போது தாம் சென்றிருந்தாகவும் அப்போது 85 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்குள்ளதாக மகிந்த தெரிவித்தாகவும் அதனை மறுத்து தனோ மூன்றரை இலட்சம் மக்கள் அங்குள்ளதாக குறிப்பிட்டதாக வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

இதற்கு கோபமடைந்த மகிந்த மூன்றரை இலட்சம் மக்களுக்கும் சோறு அனுப்புகிறேன் சாப்பிட்டு விட்டு சட்டை பிடிக்குமாறு தமிழ் கூறிவிட்டு சென்றதாகவும் வீ.ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மக்கள் பலத்தை விளங்கிக்கொண்டு ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும் – சரித ஹேரத்

videodeepam

500 ரூபாய் வரை உயரும் பாணின் விலை

videodeepam

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவோம் –  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

videodeepam