deepamnews
இலங்கை

குரங்குகள் விவகாரம் – அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பத் திட்டம்!

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விலங்குகளை சீனாவுக்கு அனுப்புவது பொருத்தமானது என குழு பரிந்துரைத்தால், தேவையான தொகையை சீனாவுக்கு அனுப்புவது முறையல்ல என்றும் பரிந்துரைத்தால், விலங்குகள் அனுப்பப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.

குரங்குகளின் சனத்தொகையை குறைப்பதற்கான மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முட்டைக்கான புதிய விலை வெளியானது!

videodeepam

2023 முதல் காலாண்டில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் தொடர்பில் வெளியாகிய தகவல்

videodeepam

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் பிணை

videodeepam