deepamnews
இலங்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை (INR) பயன்படுத்தலாம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (FICCI) ஏற்பாடு செய்திருந்த இணையப் பேரவையில் முக்கிய உரையை ஆற்றிய கலாநிதி வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயமாக INR ஐ உருவாக்குவது இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நல்லிணக்கத்தை அனுமதிக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, “இலங்கையின் பொருளாதார நிலை: தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால பொருளாதார ஒத்துழைப்பின் பகுதிகளை எடுத்துரைத்தார்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் (IT), சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

மத்திய இலங்கையில் பொதுவாக ‘சீதா எலியா’ என அழைக்கப்படும் சீதா விகாரையை நினைவுகூரும் விசேட நினைவு முத்திரையொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டு ஒரு நாள் கழித்து மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

Related posts

வெங்காயம் – டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் – அரசாங்கம் நடவடிக்கை

videodeepam

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார்

videodeepam

அலுவலக மலசலகூடத்தில் சடலம் மீட்ப்பு.

videodeepam