deepamnews
இலங்கை

2023 முதல் காலாண்டில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் தொடர்பில் வெளியாகிய தகவல்

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 316.6 பில்லியன் ரூபா வரி வருவாயை ஈட்டியுள்ளதுடன், கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் பெறப்பட்ட வரி வருமானம் 146.5 பில்லியன் ரூபாவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 216% அதிகரிப்பு என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரி வருவாயில் 109.2 பில்லியன் ரூபாய் கார்ப்பரேட் மற்றும் கார்ப்பரேட் அல்லாத வருமான வரிகள், 25.5 பில்லியன் ரூபாய் முன்கூட்டிய தனிநபர் வருமான வரி, 26.6 பில்லியன் ரூபாய் நிறுத்தி வைக்கும் வரி மற்றும் 113.5 பில்லியன் ரூபாய் மதிப்பு கூட்டப்பட்ட வரி ஆகியவை அடங்கும்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளின் கீழ் நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீட்சியடைந்தமை, வரி நிர்வாகத்தின் வினைத்திறன் அதிகரிப்பு என்பன வரி வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டின் வங்கித்துறையை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam

இணையவழி பாதுகாப்பு யோசனைக் கட்டுப்பாடுகள் என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை அமெரிக்காவிற்கு -ரஸ்யா பதில்.

videodeepam

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர் மயங்கி வீழ்ந்து பலி

videodeepam