deepamnews
இந்தியா

கர்நாடகாவில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – எழுந்துள்ள சர்ச்சை

கர்நாடகாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்போது அதனை இடையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் சிவமோகா நகரில் நேற்று பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், நிகழ்வின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

அப்போது அனைவரும் எழுந்து நின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா வேறு மொழி பாடல் பாடப்படுவதை அறிந்து உடனடியாக பாடலை நிறுத்தும்படி கூறினார்.

பின்னர் ஒலிபெருக்கியின் மூலம் பேசிய அவர், கன்னட நாட்டு கீதம் தெரிந்தவர்கள் இருந்தால் மேடையில் வந்து பாடும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒடிசா தொடருந்து விபத்துக்கான காரணம் வெளியானது!

videodeepam

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் – ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

videodeepam

தமிழ்நாட்டில் ஒரு மாதமாக அஜித் படமா, விஜய் படமா என்பது குறித்தே விவாதம் – அன்புமணி ஆதங்கம்

videodeepam