deepamnews
இலங்கை

இலங்கை மற்றும் ருவாண்டா ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இங்கிலாந்து சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமேயும் லண்டனில் சந்தித்துள்ளனர்.

விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டது.

இயற்கை அனர்த்தங்களுக்கு விரைவாக செயற்படுவதற்கான பயிற்சிகளை இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related posts

கடன் மறுசீரமைப்பின் போது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் – நாணய நிதியம் கோரிக்கை

videodeepam

கொக்குவில் இந்து கல்லூரி நிதி மோசடி –  விசாரணைகள் ஆரம்பம்

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தாமதம் – விஜேதாச ராஜபக்ஷ

videodeepam