deepamnews
இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடி : மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா பயணம்!

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 10 பேர் அகதிகளாக. இந்தியா பயணமாகியுள்ளனர். விலைவாசி இன்னும் குறைந்தாபாடு இல்லை, இந்திய மக்களை நம்பி தான் வந்துருக்கோம்: இலங்கை மூதாட்டி பேட்டி அளித்துள்ளார்.

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் வந்திறங்கி மரைன் போலீசாரால் படகில் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்  இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை  சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று  ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 3 குடும்பத்தினர்  முல்லைத்தீவு  கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக  நேற்று இரவு சுமார் 8 மணியளவில்  பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அடுத்துள்ள முதல் மணல் திட்டில் பகுதியில் வந்திறங்கி வெகு நேரமாக  காத்திருந்தனர்.

இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அப்பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் ஒன்றாம் மணல் திட்டிற்கு படகில் சென்று அங்கு காத்திருந்த  இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததாக சொல்லப்படுகிறது ஆனால் இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை இலங்கை யில் வாழ வழி இல்லாமல் தான் இந்திய மக்களை நம்பி கடலில் உயிரை பணயம் வைத்த பிளாஸ்டிக் படகில் வந்நதாக இலங்கயில் இருந்து அகதியாக வந்துள்ளதாக 75 வயது மூதாட்டி தெரிவித்தார்.

இலங்கையில் இந்து கோவில்களை இடித்து விட்டு புத்த விகாரைகளை சட்விரோதமாக கட்டி வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக  தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  254 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

videodeepam

இரண்டு வருடங்களின் பின்னர் பசறை – லுனுகல வீதியில் மீண்டும் விபத்து

videodeepam

நுவரெலியா விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட நுவரெலியா செல்கிறார் கல்வி அமைச்சர்

videodeepam