deepamnews
இலங்கை

மக்கள் சரியான தலைமைகளை இனம் காண வேண்டும் – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

கட்டி முடிக்கப்பட்டு கலசம் வைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை அப்புறம் படுத்த போகிறோம் என மக்களை ஏமாற்று அரசியல் செய்பவர்களை தமிழ் மக்கள் இனியாவது அடையாளம் காண வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குரு சுவாமி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறீசபாரத்தினத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில் அண்மையில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் மக்களுடைய நில ஆக்கிரமிப்பு பயங்கரவாத சட்ட நீக்கம், பௌத்த மாயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து கடையடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.

ஆனால் எமது கடையடைப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள்.

அவர்களின் கருத்தை கண்டு கொள்ளாத மக்கள் முழு கடையடைப்புக்கு பூரண ஆதரவு வழங்கி எமது கோரிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி இருந்தார்கள்.

ஆனால் அண்மையில் தையிட்டி திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தப் போகிறோம் என  ஒரு பகுதி மக்களை ஏமாற்றி போராட்டம் ஒன்றை செய்திருந்தார்கள்.

அவர்களுடைய போராட்டம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் போராட்டம் வென்றுவிட்டதாகவும் அறிவித்தார்கள்.

விகாரை கட்டப்பட்ட போது அதனை தடுக்க முன் வராமல் கலசம் வைக்கப்பட்ட போதும் அதனை வேடிக்கை பார்த்துவிட்டு ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் மக்களை பலிக்கடா ஆக்கி அரசியல் செய்கிறார்கள்.

எமது கட்சியின்  வலி கிழக்கு முன்னாள் தவிசாள் நிரோஷ் நிலாவரையில் தொல்பொருள் என்ற போர்வையில் பௌத்தமயமாக்களை மேற்கொள்ள முற்பட்டபோது தவிசாளராக மக்களுடன் இணைந்து அதனை தடுத்தார்.

அதுமட்டுமல்லாது நிலாவரை கிணற்றுக்கு அருகில் அரசமரம் ஒன்றின் கீழ் சிறிய புத்தரை இரவோடு இரவாக வைத்தார்கள்.

அதனையும் தவிசாளர் சபை உறுப்பினர்கள் மக்களுடன் சேர்ந்து அகற்றினார்.

ஆனால் தையிட்டியில் விகாரை கட்டும் வரை வலி வடக்கு பிரதேச சபை வேடிக்கை பார்த்த நிலையில் சில பங்கு ரோத்து அரசியல்வாதிகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக போராட்டத்தை நடத்தினார்கள்.

இவ்வாறு போராட்டம் நடத்தியவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தத்திற்குள் தமிழ் மக்களை தள்ள போகிறது என கூக்குரல் இட்டார்கள்.

நான் ஒன்றை தெளிவாக கூறுகிறேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை ஏற்கப் போவதும் இல்லை.

ஆகவே தமிழர் ஒரு தேசமாக எமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் இனியாவது சரியான தலைமைத்துவத்தை இனம் கண்டு அவர்களின் பின்னால் அணி திரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam

கிளிநொச்சியில் பத்தாவது வருட குருதிக்கொடை முகாம்.

videodeepam

ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam