deepamnews
இலங்கை

மத்திய வங்கி சட்டமூலத்தை வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றுவதாக இருந்தால் பல சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியளவில் சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தயாரிக்கப்பட்ட மத்திய வங்கி சட்டமூலத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என விரிவாக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை ஆட்சேபித்து பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் திகதி தமது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

நிர்வாக, நிதி சுயாதீனத்தன்மையுடன் கூடிய மத்திய வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்காகவே புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக சபை, நிதிக் கொள்கை சபை என்ற இரு பிரிவுகளை ஏற்படுத்தவும் சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வு நிலை பொலிஸ் அதிகாரிக்கு கௌரவிப்பு நிகழ்வு.

videodeepam

வசந்த முதலிகேவின் தடுப்புக் காவலை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

videodeepam

பாடசாலைகளில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பரீட்சைகளை அனைத்தும் ஒத்திவைப்பு

videodeepam