deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று நாளை (11) முதல் மே 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதிக்கான முதல் மதிப்பீட்டிற்கு முன்னர், வழமையான ஆலோசனை நடவடிக்கையின் ஒரு படியாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனர் திரு.கிருஷ்ணா சீனிவாசனும் கலந்து கொள்வார் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

Related posts

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்  – செல்வம் எம்.பி கோரிக்கை!

videodeepam

கச்சதீவு திருவிழாவுக்கு 12 இலட்சம்  ரூபா செலவு – இரு மாதங்கள் கடந்து  மாவட்ட செயலகம் பதில்

videodeepam

வீட்டுப் பணிப்பெண்ணாக செல்வோருக்கு தொழில் பயிற்சியை கட்டாயமாக்க தீர்மானம்

videodeepam