deepamnews
இலங்கை

காலிமுகத்திடல் போராட்டக்காரர் பியத் நிகேஷலா மீது தாக்குதல்

பத்தரமுல்ல – கொஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (10) மாலை சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கடுவெல துணை மேயர் ஆற்றிற்குள் இழுத்துச்செல்லப்பட்ட காணொளியினை பதிவேற்றியமைக்காகவே அவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நிகேஷல தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு குறித்த திகதியில் இடம்பெறும் சாத்தியம் – தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை

videodeepam

வெப்பமான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

யாழ் மாவட்ட செயலகத்தில் காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம்.- மறு அறிவித்தல் வரை துரித சேவை நிறுத்தம்.

videodeepam