deepamnews
இந்தியா

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி –  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது!

இந்தியா – கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மாநிலத்தில் உள்ள 30 மையங்களிலும் இடம்பெற்றுள்ளது.

மொத்தமாகவுள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி சுமார் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப்படையின் அத்துமீறல்கள் இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam

எந்த  தயக்கமும் இன்றி  தேர்வை எதிர்கொள்ளுங்கள்- மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

videodeepam

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருகிறார்- பழ. நெடுமாறன மீண்டும் வலியுறுத்தல்

videodeepam