deepamnews
இலங்கை

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கம்

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நேற்றையதினம் முற்பகல் முதல் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவம் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்து வலுவடைந்து வரும் இலங்கை ரூபா

videodeepam

இன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்பு

videodeepam

யாழ்ப்பாணத்தில் சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் – சிறுவர் இல்ல காப்பாளர் கைது

videodeepam