deepamnews
இலங்கை

மின் துண்டிப்பு மீண்டும் ஏற்படும் அபாயம்: செயலிழக்கும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம்

திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை 100 நாட்கள் செயலிழக்க செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏனைய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை பயன்படுத்தி, எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கமைய, மின்னுற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய 30 ஆவது கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன், மின்சார சபைக்கு தேவையான நிலக்கரி முழுமையாக கிடைக்கப்பெறும் என மின்சக்தி அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

videodeepam

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு

videodeepam

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் உறுதி-அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.

videodeepam