deepamnews
இலங்கை

மின்சார  மறுசீரமைப்பு தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மின்துறையின் மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் அத்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கை, இந்தியா, பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் இக் கலந்துரையாடலில் இணைந்தனர்.

நாட்டில் காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கிய நிதியுதவிக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam

மீண்டும் அதே இடத்தில் நாவலரின் திரு உருவப்படம் – ஆளுநரின் பணிப்புரையில் பொருத்தப்பட்டது

videodeepam

சிறைச்சாலையில் என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டது – வசந்த முதலிகே குற்றச்சாட்டு!

videodeepam