deepamnews
இலங்கை

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு: விசேட  விசாரணைகள் ஆரம்பம்

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தங்கநகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

42 வயதான ஆர்.ராஜகுமாரி எனப்படும் குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்கநகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா  ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எனினும், அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்ததாக அவரின் கணவர் செல்வதுறை யேசுராஜ் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் குறித்து பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண்ணின்  சடலம் கடந்த 12ஆம் திகதி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், 13ஆம் திகதி பதுளை தெமோதரையில் சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 3 முக்கிய அரச நிறுவனங்கள் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி

videodeepam

ஊசி ஏற்றியதால் உயிரிழந்த யுவதி –  மருந்து செலுத்திய விதம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

videodeepam