இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர்.
இப்பகுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். 14 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆரம்ப விசாரணைகளின்படி, இப்படகிலிருந்து எவரும் உயிர்த்தப்பவில்லை எனத் தெரியவருவதாக அவுஸ்திரேலிய போக்கவரத்து அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.