deepamnews
இந்தியா

உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் – இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி என இந்திய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

3 நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு தன்னை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் இந்திய பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், பப்புவா நியூகினியா, அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வியாழக்கிழமை தலைநகர் டெல்லிக்கு திரும்பினார்.

அவரை வரவேற்க டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது நாட்டின் கலாசாரத்தைப் பற்றி பேசுகிறபோது உலகின் கண்களை நான் நேராகப் பார்க்கிறேன். காரணம், இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உதவிய மக்கள்தான் இதற்கு காரணம். இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள் என்றால் அவர்கள் நேசிப்பது நாட்டைத்தான், மோடியை அல்ல.

தமிழ்மொழி நமது மொழி. இந்த மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி. இது உலகின் பழமையான மொழி. நான் பப்புவா நியூ கினியாவில் திருக்குறள் புத்தகத்தின் டோக் பிசின் மொழி பதிப்பை வெளியிடுகிற வாய்ப்பினைப் பெற்றேன்.

நான் கூறுவது 140 கோடி இந்தியர்களின் குரல் என்று உலகத்தலைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் வெற்றிக்கதையைக் கேட்பதற்கு உலகம் ஆர்வமாக இருக்கிறது. இந்தியர்கள் தங்களது சிறந்த கலாசாரம், பாரம்பரியங்கள் பற்றி பேசுகிறபோது, ஒரு போதும் அடிமை மனநிலையால் பாதிக்கப்படாமல் தைரியத்துடன் பேச வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் கடும் வெப்பக் காலநிலை – வெப்பத்தை சமாளிக்க சுகாதாரத்துறை பொது மக்களுக்கு ஆலோசனை

videodeepam

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்ற யூகங்கள் பொய்யானது என்கிறார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

videodeepam

இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

videodeepam