12 திருமுறைகளை இலகுபடுத்தும் நோக்கில் 16 தொகுதிகளாக தொகுத்த தற்கால சோழன் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறுவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு சிட்னியில் கௌரவம் வழங்கப்பட்டது.
மறுவன்புலவு சச்சிதானந்தன் சமயத்திற்கு ஆற்றிய மிகநீண்ட சேவையைப் பாராட்டி குறிப்பாக தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து வெளியிடப்பட்ட பன்னிரு திருமுறைத் தொகுப்புகள் என்ற 16 தொகுதி புத்தகங்களின் ஆணிவேர் மறுவன்புல சச்சிதானந்தனின் பணியை கௌரவிக்க முகமாக அவுஸ்திரேலியா சிட்னி வாழ் சைவத் தலைவர்கள் சிவனடியார்கள் ஒன்று கூடி குறித்த கௌரவத்தை வழங்கினார்.
குறித்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சிவனடியார் ஒருவர், இலங்கைத் தீவில் சைவம் காக்க முன்னின்று உழைப்பவரும்
அறிக்கைகளோடு மட்டுமல்லாது, அனைத்திற்கும் அத்திவாரமாக இருந்து செயற்படுத்தும் ஐயாவின் ஆளுமையையை எண்ணி 82 வயது இளைஞன் என புகழாரம் செய்தார்.