deepamnews
இலங்கை

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மே 31ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களுக்கு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, அண்மையில், சர்வதேச நாணயத்தின் குழு ஒன்று வழக்கமான ஆலோசனைக்காக வந்து திரும்பிய நிலையிலேயே, ஒகாமுராவின் வருகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

யாழ். வேம்படி மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை – 110 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’

videodeepam

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானிக்கவில்லை –  அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

videodeepam

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இரண்டு குண்டுகள் கண்டுபிடிப்பு

videodeepam