deepamnews
இலங்கை

இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை குறைவடையும்: வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து  சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடியதாக நேற்று  (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் சீமெந்து உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்டுமான பொருட்களின் விலையையும் குறைக்கும் வகையில், இறக்குமதியாளர்களுடனும் உற்பத்தியாளர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பில் காதலி கொலை – தற்கொலைக்கு முயன்ற காதலன்

videodeepam

வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

videodeepam

பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் அம்மன் சிலையினை வைப்பதற்கு முழுமையான உரிமை உள்ளது – சிவஞானம் ஆதங்கம்

videodeepam