deepamnews
இலங்கை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக சமரச நடவடிக்கை!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சமரசத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் நாட்டுக்கு ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கை சமரசத்திற்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதிக்கமைய இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவுள்ளதுடன், அங்கு கப்பல் நிறுவனம் மற்றும் கப்பல் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அவுஸ்திரேலிய சட்ட ஆலோசகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு

videodeepam

தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணம் அதிகரிப்பு.

videodeepam

யாழ். மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

videodeepam