deepamnews
இலங்கை

விரைவில் விலை குறைக்கப்படும் உணவுப் பொருட்கள் – வர்த்தக அமைச்சு அறிவிப்பு

நாட்டில் கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை தற்காலிகமானதென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது. அது  தொடர்கின்றது.

எனினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாததுடன், இது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலைகள், அடுத்த சில வாரங்களில் குறையலாமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லையென அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேக்கர குறிப்பிட்டுள்ளார்.  

Related posts

மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் மக்கள் – அங்கஜன் தெரிவிப்பு!

videodeepam

மதுபான விற்பனை 30% வீழ்ச்சி – மூடப்பட்டது மதுபான உற்பத்தி நிலையங்கள்  

videodeepam

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன் சூட்சமம்

videodeepam