deepamnews
இலங்கை

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களம் இறங்கும் தமிழன்

சிங்கப்பூரில்  எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட  சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.

 யாழ்ப்பாணம் ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையர் பிறப்படமாகக் கொண்ட சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து இராஜினாமா செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாத்திரை சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் பலி – 28 பேர் காயம்

videodeepam

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து  இன்று நள்ளிரவு வரை  தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

videodeepam

ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை நாளை இடம்பெறாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

videodeepam