deepamnews
இலங்கை

மக்களின் நிலைப்பாட்டை அறிய உடனடியாக தேர்தலை நடத்துங்கள் -கொழும்பு பேராயர் கோரிக்கை

உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீதியை அநீதியாக மாற்றவும், ஆட்சியை சர்வாதிகாரமாக்கவும், சட்டத்தை மாற்றி சமூகத்தை வழிநடத்தவும் இன்றைய தலைவர்கள் கைகோர்த்து செயற்படுவதாகவும் அத்தகையவர்களை வெளியேற்றுவதற்கு அனைவரும் தயாராக வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் வலியுறுத்தினார்.

இவ்வாறான ஆட்சியாளர்கள் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் எனவும் அவர்களை வெளியேற்றுவது அவசியம் எனவும் கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

Related posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு இல்லை

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக பசிலும் நாமலும்  முன்மொழிவு

videodeepam

கடற்கரைகளில் ஆபத்து – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

videodeepam