உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக நேற்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதிக்கு மக்களின் கருத்தை நசுக்குவதற்கு இடமளியோம் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து’ என்ற தொனிப்பொருளில் நேற்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களும் கட்சியின் முன்வரிசை தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தினால் தேர்தல்கள் திணைக்களத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.