deepamnews
இலங்கை

ஊழல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

வெளிநாடுகளில் வாழும் இலங்கை செல்வந்தர்கள் நாட்டில் முதலீகளை மேற்கொண்டாலே, நாட்டை பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அறிவு சார்ந்த நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினால்தான் நாம் இன்று நாடு என்ற வகையில் தோல்வியடைந்துள்ளோம்.

எனினும், நாட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. குறுகிய காலத்தில், இந்தப் பிரச்சினைகளில் இருந்து எம்மால் மீண்டெழ முடியும். இதற்காக நாம் சர்வதேசத்திடம் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

வெளிநாடுகளில் வசித்துவரும் செல்வந்த இலங்கையர்களின் உதவிகளைப் பெற்றாலே, இந்தப் பிரச்சினைகளிலிருந்து எம்மால் மீண்டெழ முடியும்.

நாட்டில் முதலீடுகளை செய்ய அவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். எனினும், இங்கு காணப்படும் இலஞ்ச, ஊழல் நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுவதால்தான், அவர்களால் நாட்டுக்கு உதவ முடியாமல் உள்ளது.

நாம் முதலில் இந்த கலாசாரத்தை இல்லாது செய்ய வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியான குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதுடன், அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களையும் நாம் கைப்பற்றுவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை நடத்த குழுவொன்றை நியமிக்க தீர்மானம்!

videodeepam

சீன அரசாங்க தலைவர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை – ஜனாதிபதி ரணில் திட்டம்

videodeepam

தாயாரின் உயிரிழப்பை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

videodeepam