deepamnews
இலங்கை

நெடுந்தீவு குமுதினி படகு மீண்டும் சேவையில்!

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்று மாலை குமுதினிப் படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்று காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது.

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் – நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் ,

videodeepam

கூரிய ஆயுதங்கள் சகிதம் கணவனால் கடத்தப்பட்ட மனைவி – குடத்தனையில் சம்பவம்!

videodeepam

வங்கி முறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் உறுதி

videodeepam