deepamnews
இலங்கை

மன்னாரில் பல போதைப் பொருளுடன் இருவர் கைது!

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார்- உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுடன் இன்று புதன்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களது உடமையிலிருந்து DAVIDOFF சிகரெட் 09, PREGAB 150mg card 04 Tablet 40, GABIN 75 mg card 12 Tablet 120 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related posts

கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு

videodeepam

மாணவர்களின் போராட்டத்தின்போது காலாவதியான கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

videodeepam

தேர்தல் தாமதம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

videodeepam