deepamnews
இலங்கை

வடமராட்சியில் இடம் பெற்ற உள்ளூர் உற்பத்தி சந்தையும், உணவு திருவிழாவும்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமான பருத்தித்துறையும்,  கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த உள்ளூர்  உற்பத்தி பொருட்களின் விற்பனைச் சந்தையும் உணவு திருவிழாவும் இன்றைய தினம் காலை 8:30  மணியிலிருந்து நெல்லியடி மைக்கல் விளையாட்டுக்  கழகமைதானத்தில் இடம்பெற்றது.

இதில்  வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேசம்  மற்றும் கரவெட்டி பிரதேசத்திற்குட்பட்ட  உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற  கைவினைப் பொருட்கள்,   தைத்த ஆடைகள்,  மற்றும் உள்ளூர் இயற்கை உணவுப் பொருட்கள், உட்பட விவசாய திணைக்களத்தினரால் நாற்றுக்கள் விற்பனையும் இடம்பெற்றன.

இதில் வடமராட்சிக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள்,  பொதுமக்கள்,  வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் சென்று பொருட்களை கொள்வனவு செய்தமை அவதானிக்க முடியும்

Related posts

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைஏற்கமாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

videodeepam

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான் – விசாரணை குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரிக்கை

videodeepam

பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு

videodeepam