ஜெயிலர் படத்தின் வெற்றி காரணமாக ரஜினிக்கும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு விலை உயர்ந்த காரை வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது .உலகளவில் ரூ. 600 கோடியை கடந்துள்ளது. இதன்மூலம் இதுவரை சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 250 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . .
ஜெயிலர் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 28 நாட்கள் ஆகும் நிலையில் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது..இந்நிலையில், உலகளவில் இதுவரை ஜெயிலர் படம் ரூ. 611 கோடிக்கும் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.