deepamnews
இலங்கை

வவுனியா இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07.09) பிடியாணை பிறப்பித்துள்ளது.  

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.  

இதன்போது, மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். குறித்த மூவரும் தலைமறைவாகவுள்ளதால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய பகிரங்க பிடியாணை உத்தரவு வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு இன்று (07.09) திகதியிடப்பட்டிருந்தது. எனினும் அடையாள அணிவகுப்புக்கு உரிய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதானால் குறித்த வழக்கு அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு மீண்டும் திகயிடப்பட்டது. 

Related posts

இலங்கையில் நிறுவனரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் – பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவிப்பு 

videodeepam

இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது – சுகாஷ் தெரிவிப்பு

videodeepam

நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

videodeepam